Save Hinduism Tamil 1
இந்து மதத்தினைக்
காப்பாற்றுங்கள்
(SAVE
HINDUISM)
T P விஸ்வநாதன், B.Com., B.L., அட்வகேட்.
நமது
புண்ணிய பூமியான பாரத தேசத்தில், அதுவும்
குறிப்பாக தென்நாட்டில், அதுவும் குறிப்பாக, தமிழ்நாட்டில், திராவிடக் கட்சிகளுக்கு நாம் ஓட்டு போட்டு, இந்துக்கள்
தங்கள் தலையில் தானே மண்ணை வாறிப் போட்டுக் கொண்டுவிட்டோம். இதில் குறிப்பாக, கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸ் கட்சிகள், மற்றும்
சில மாநிலக் கட்சிகள் உள்ளடக்கம். பிள்ளையார்
சுழி மாதிரி, காங்கிரஸ் கட்சியினர் இந்து அறநிலையத் துறை சட்டத்தினை முதன் முதலாக இந்தியாவின் துணைக் கண்டத்தில் அமுலாக்கி இந்து சமுதாயத்திற்கு துரோகம் இழைக்க துவங்கிற்று. ஸ்வாமி தயானந்த சரஸ்வதி, தருமபுர
ஆதீனம் இன்னமும் ஒரு சிலரும் சட்டப்படி இதனை அணுக முயற்சி செய்தும், முழுவதுமாக
பலன் கிட்ட வில்லை. நமது
மதத்தினை தீவிர மத மாற்று
இயக்கத்திலிருந்து காப்பாற்ற நினைப்பவர்களில் அனேகர் முதியவர்கள். இளைஞர்கள் மிகக் குறைவு. இருக்கும்
ஒரு சில முதியவர்களும் இறந்து கொண்டே வருகின்றனர்.
நான் ஒரு சில மாதங்களாக இந்து மதத்தினைக் காப்பாறுங்கள் என்ற ஒரு வாட்ஸ் அப் (எண்:89190
21144) குழுவினை அமைத்து, அதன்
மூலம், நமது
இந்து சமுதாயத்திற்கு இழைக்கப்படும் துரோகங்களை அம்பலப்படுத்தி வருகிறேன். யு
ட்யூப் போன்றவற்றிலும் அவ்வப்போது வீடியோக்கள் போட்டு வருகிறேன். அதனால், பல் வேறு அயல் நாடுகளிலிருந்து பல கிருஸ்துவ
அமைப்புகள் என் மொபைல் ஃபோனைக் கண்காணித்து வருகின்றனர். இந்த ஒரு சில அமைப்புகள் நக்சலைட்டுகளுடன் தொடர்பு
கொண்டு பல இந்து
மதத்திற்காக தீவிரமாகப் போராடும் பல நபர்களை
கொலை செய்து வருவதை நான் நன்கு அறிவேன். எனக்கு
ஏற்கனவே வயது 78 ஆகி
விட்டது. இருப்பினும்
உயிரினைப் பணயம் வைத்து இந்தப் புண்ணிய பணியில் துணிவாக இறங்கி உள்ளேன். காரணம்: நம் மதக் கொள்கைகளின்படி, நாம் இறக்கும் தேதி நம்மைப் படைக்கும் போதே, கடவுள்
நிர்ணயம் செய்து விட்டார். கோழை
தினம் இறக்கிறான். எனவே
உயிருடன் இருக்கும்போதே, முடிந்த வரை, நம்
இந்து சமுதாயத்திற்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும்
என்ற துணிவில் உள்ளேன். எல்லாம்
வல்ல இறைவன் இந்தப் புண்ணிய பணி நிறைவேற எனக்கு அருளுவாராக! இன்னமும், உலக விஷயங்களிலும், சுய நலன்களிலும் என் கடைசி காலத்தினைக் கழிக்க விரும்பவில்லை.
காரணம்: ஒரு பக்கம், அயல்
நாட்டிலிருந்து பணம் பெற்றுக் கொண்டு, ஒரு
சிலர் நமது நாட்டில் ஒரு சில கிருஸ்துவ அமைப்புகளின் துணையினால், கோடிக் கணக்கில் பணம் சேர்த்து வருகின்றனர். இதற்கு மறு பக்கம் தமிழ் நாட்டிலுள்ள திராவிடக் கட்சிகளும், கம்யூனிஸ்ட்
மற்றும் காங்கிரஸ் கட்சிகள் துணை போகின்றனர். இந்து
மதத்திற்கு ஆதரவாக இருக்கும் பாரதீய ஜனதாக் கட்சிக்கு நாம் போதுமான ஆதரவு தராமல், மோடியைக்
குறை கண்டு கொண்டிருக்கிறோம். கிருஸ்துவ மத மாற்றம்
அதி தீவிரமாக நடந்து கொண்டு வருகிறது. அவர்கள்
நமது பாரத தேசத்தை கிருஸ்துவ நாடாக மாற்றியே ஆக வேண்டும்
என்ற வைராக்கியத்தில் தீவிரமாக உள்ளார்கள். நாமோ, மத சார்பற்ற
அரசாங்கம் என்று நம்மை
நாமே ஏமாற்றிக் கொண்டு, நம்மைக்
குழி தோண்டிப் புதைக்கும் அரசியல் கட்சிகளுக்கு நம் சொந்த ஆதாயங்களுக்காகாவோ, ஜாதி அடிப்படையிலோ ஓட்டு போட்டு, நமது
சமுதாயத்திற்கு துரோகம் செய்கிறோம். இந்து
மத அமைப்புகளுக்குத்
தீவிரவாதிகள் என்று பெயரும் சூட்டி நடுநிலை என்ற போர்வையில் மறைமுகமாக நம்மை அழிக்க நினைக்கும் சமுதாய விரோதிகளுக்குத் துணை போகிறோம். எப்போதும், நாம், நமது
குடும்பம், நமது
தொழில் என்றே பொழுதினைப் போக்குகிறோம். நமது மதத்தின் மீது எத்தனை பேருக்கு
அக்கரை உள்ளது? எது எக்கேடு கெட்டுப் போனால் என்ன, நாமும், நம் குடும்பமும் வசதியாக
வாழ்ந்தால் போதுமா?
இந்து
மதம் ஆபத்தில் உள்ளது. ஒட்டு
மொத்த மத மாற்றம், இந்து கோவில்களும், நிர்வாக அமைப்புகளும் அழிப்பு, வோட்-பேங்க் அரசியல், இந்துக்களின்
அக்கரை இன்மையும், அறியாமையுமே
இதற்குக் காரணம்.
அனைத்து மதத்தினரும், இதர நாட்டின் மீது படை எடுத்து, ஆக்கிரமிப்பு செய்து கற்பழிப்பு, கொள்ளை, கொலை ஆகியவைகள் செய்தே, அடுத்த தேசத்தில் தங்கள் மதத்தினை புகுத்தினார்கள்
என்பதே உண்மை. ஆனால், நம் மதத்தினர் எப்போதும் அவ்வித
செயல்களில் ஈடுபட்டதே இல்லை. மற்றவர்கள் மதம் மாற்ற உபயோகித்த
யுக்திகளே தருமத்திற்கு விரோதமானது. படை பலம்,
அதிகார பலம், பண பலம், ஆகியவற்றைக் கொண்டு, ஒரு சில பணத்தாசை பிடித்த தன்னலம் மிக்க துரோகிகளின் துணை கொண்டே மத மாற்றங்கள்
இந்தியாவில் நடை பெற்றன என்பதில் சந்தேகமே இல்லை.
பொய்யான வரலாறுகளை ஆராய்ச்சி என்ற பெயரில் எழுதி, அப்போதைய ஆட்சியாளர்களின்
துணை கொண்டு, இதற ஜாதி, இனம், பாஷை, ஆகியவைகளின்
மீது துவேஷ மனப்பான்மையை மாற்று தேச ஆக்கிரமிப்பாளர்கள் நம்மிடையே பரப்பி, நம்மை பிரித்து ஆதாயம் கண்டனர். நா வன்மை கொண்ட இந்த தேசத் துரோகிகளின்
பேச்சில், நம்மில் ஒரு சில படித்தவர்கள் கூட, தனி நபர் ஆதாயங்களுக்காக அவர்களைப்
பின்பற்றிப் போய்க் கொண்டிருக்கின்றனர்.
உறங்கியது
போதும்! ஓய்வு
எடுத்தது போதும்!! தினமும் கொஞ்ச நேரமாவது நமது மத விழிப்பிற்காவது
ஒதுக்குங்கள்!!! இன்னமும் வெறுமனே இருந்தால், உங்களுடைய
பேரக் குழந்தைகளும், சந்ததியினரும் கிருஸ்துவர்களாக மாறும் வெகு தூரத்தில் இல்லை. எனவே
விழிதெழுங்கள்!! சந்தேகங்கள்/ அபிப்பிராய பேதங்கள்
இருப்பின் 8919021144-க்கு தொடர்பு கொள்ளுங்கள்.
Comments
Post a Comment